Wednesday, February 4, 2009

தனிமை

ஊருக்கு செல்லும் நாட்களை எண்ணி விட்டத்தை பார்த்து கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் ஒருவனின் சோக கதை.

சும்மா ஒரு மூணு மாத பயணமாக என்னை ஆன்சைட் அனுப்பி வைத்தார்கள். எனக்கும் ஆர்வமாக தான் இருந்தது அப்போ.இங்கே வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது இது ஒரு ஜெயில் வாழ்க்கை அப்படின்னு.நான் இங்க வந்து சமைக்க கூட கஷ்டபடலீங்க மொக்கை போடுறதுக்கு தாங்க ரொம்பவே கஷ்டபட்டேன்.ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாம கூட இருந்திடலாம் ஆனா தினமும் நண்பர்களிடமும் அம்மாவிடமும் பேசாம இருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு.

தனிமை அப்பிடிங்கற தமிழ் சொல்லுக்கு இப்பொழுது தான் என்னால் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்ன பண்றது விதி வலியது என்னை தனிமைப்படுத்தி வாட்டி எடுத்து கொண்டிருக்கிறது.சில பல கட்டாயங்களுக்காக இதை நான் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

6 comments:

Mahesh said...

எந்த ஊருங்க? சிங்கைன்னா உடனெ வரலாமே?

ஸ்ரீதர்கண்ணன் said...

எந்த ஊருங்க? சிங்கைன்னா உடனெ வரலாமே?

நான் பாஸ்டன்ல (Boston) குப்பை கொட்டுறேங்க... வருகைக்கு நன்றி மகேஷ்..

butterfly Surya said...

பொறுமையே பெருமை தரும்.

சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும். நிறை / குறை கூறவும்.

வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்கண்ணன் said...

//பொறுமையே பெருமை தரும்.

சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும். நிறை / குறை கூறவும்.

வாழ்த்துக்கள்.//

வந்து பார்க்கிறேன் வண்ணத்துபூச்சியார் அவர்களே. வருகைக்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏதோ ஒரு புத்தகத்துல படிச்ச ஞாபகம்.. தனிமை மாதிரி கொடுமையான ஒன்னு எதுவுமே இல்லைன்னு.. take care நண்பா..

ஸ்ரீதர்கண்ணன் said...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்

Counter