Tuesday, March 17, 2009

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.

நமது ஒரு விரல் அடுத்தவரை சுட்டிக்காட்டும் பொழுது நம்முடைய மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்குகின்றன.

இந்த வரிகள் எவ்வளவு சத்தியமான வரிகள். இந்த வரியின் ஆழத்தை நாம் உணர்ந்தால் அடுத்தவர் மீது நாம் குறைகளை கூற மாட்டோம்.

நாம் அறிவுரை கூறினால் மட்டும் மற்றவர்கள் திருந்தி விடுவார்களா என்ன?

நாம் அறிவுரை சொல்லுவதற்கு முன் நமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தனிமனித ஒழுக்கத்தினாலும், பிறர் மீது நாம் செலுத்தும் அன்பினால் மட்டுமே மிகப்பெரிய ஆரோக்கியமான மாற்றங்களை இச்சமுதாயத்தில் படிப்படியாக நம்மால் நிகழ்த்த முடியும்.

- கருத்து கந்தசாமி

Friday, February 27, 2009

கொடுமை

இங்கே கொடுமை எனப்படுவது யாதெனின் நாம வெச்ச சாம்பாரை நாமே சாப்பிடுவது தான்.

அளவில்லா உப்புடன்
உப்புமா பாண்டி.

Thursday, February 19, 2009

பிழைக்க தெரியாதவன்

எவன் ஒருவன் தனது எண்ணங்களில், செயல்களில் உண்மை மற்றும் நேர்மையை உறுதியாக பின்பற்றுகிறானோ அவனே பிழைக்கத் தெரியாதவன்.

- கருத்து கந்தசாமி

Wednesday, February 4, 2009

தனிமை

ஊருக்கு செல்லும் நாட்களை எண்ணி விட்டத்தை பார்த்து கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் ஒருவனின் சோக கதை.

சும்மா ஒரு மூணு மாத பயணமாக என்னை ஆன்சைட் அனுப்பி வைத்தார்கள். எனக்கும் ஆர்வமாக தான் இருந்தது அப்போ.இங்கே வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது இது ஒரு ஜெயில் வாழ்க்கை அப்படின்னு.நான் இங்க வந்து சமைக்க கூட கஷ்டபடலீங்க மொக்கை போடுறதுக்கு தாங்க ரொம்பவே கஷ்டபட்டேன்.ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாம கூட இருந்திடலாம் ஆனா தினமும் நண்பர்களிடமும் அம்மாவிடமும் பேசாம இருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு.

தனிமை அப்பிடிங்கற தமிழ் சொல்லுக்கு இப்பொழுது தான் என்னால் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்ன பண்றது விதி வலியது என்னை தனிமைப்படுத்தி வாட்டி எடுத்து கொண்டிருக்கிறது.சில பல கட்டாயங்களுக்காக இதை நான் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

Thursday, January 29, 2009

வலி

ஒவ்வொரு தோல்வியின் போதும் எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் பட்டு கொண்டாலும் உள்ளே ஒரு சிறிய வலி இருக்கத்தான் செய்கிறது.

Counter